This content originally appeared on DEV Community and was authored by DIVYA G
வணக்கம்…இணையம் சார்ந்த கற்றல் தேடலில் இப்பயிற்சி கண்ணில் தென்பட்டது மகிழ்ச்சியே. முதல் நாள் பயிற்சியில் தொடக்கம் மற்றும் அறிமுகம் சிறப்பாக அமைந்தது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட முக்கிய வலைத்தளங்களின் செய்திகள் ஒரு கோர்வையாக குறிப்பு புத்தகம் போன்று பயிற்சி காலம் தொடங்கி முடியும் வரை அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையிலும் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட்ட தலைப்புகள் முக்கிய குறிப்புகள் மட்டும் இடம்பெறும் வண்ணம் அமைந்தால் இன்னும் சிறப்பாக இவ்வகுப்பினை கொண்டு செல்ல இயலும் என்பது என் கருத்து. ஏனெனில் வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவரும் முழு மென்பொருள் தகவமைகளை கொண்டவர்கள் அல்ல. பன்முக துறை சார்ந்தவர்கள். அனைவரும் பயிற்சி அன்றைய செய்திகளை நினைவு படுத்தி பயிற்சி பெறவேண்டும் என விரும்புவர். அவர்களுள் நானும் ஒருவரே….
This content originally appeared on DEV Community and was authored by DIVYA G